காவிரி பிரச்சனைக்காக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் குரல்கள், உண்ணாவிரதம் என்று பல்வேறு வகைகளில் போராடிப் பார்த்தோம். ஆனாலும் அதற்கு தீர்வு இதுவரை எட்டவில்லை.
தற்போது இன்னொரு முயற்சியாக சினிமாவாக எடுக்க முன்வந்திருக்கிறார் ராஜாமகேஷ் என்ற புதுமுக இயக்குனர். படத்திற்கு பெயர் 'தம்பியுடையான்'.
காவிரி தண்ணீர் திறந்துவிட, மக்களைத் திரட்டி போராடி பெறுவதுதான் கதையின் மையக் கருத்து. அத்தோடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுத்தே தீரவேண்டியதற்கான காரணத்தை மத்திய அரசுக்கு விளக்கமளிக்கும் படமாகவும் இது இருக்குமென்கிறார் இயக்குனர்.
இப்படத்தில் ஆதித்யா அன்பு என்ற புதுமுகம் ஹீரோவாகவும், மனிஷா சாட்டர்ஜி என்ற மும்பை மாடல் அழகி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
தண்ணீர் பிரச்சனைதான் என்றாலும், காதல் பிரச்சனையும் உண்டு என கூறுவதோடு, இதனால் கர்நாடகாவிற்கு ஏதேனும் வருத்தம் வருமே என்று கேட்டால்... வருத்தம் வருவது பற்றி கவலையில்லை, தண்ணீர் வரவேண்டும் அதுதான் முக்கியம் என்கிறார்.