Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசையால் பூமியை ஆளலாம்!

Advertiesment
இசையால் பூமியை ஆளலாம்!
, புதன், 7 ஜனவரி 2009 (21:09 IST)
எல்லா சினிமா கலைஞர்களும் தன் உறவுகளை வைத்து முதல் படத்தை தயாரிக்கிறார்கள். அப்படி செலவு செய்யும் பணம் ஒரு வியாபாரத்திற்கான முதலீட போலத்தான் செய்கிறார்கள்.

அப்படி வாரிசுகளை தன் சொந்த பட்ஜெட்டில் களம் இறக்கி வெற்றி பெறுபவர்கள் ஒன்றிருவர் மட்டும்தான். பெரும்பாலானோர் காணாமல் போய்விடுகிறார்கள்.

அப்படி முதல் போட்டு இன்று நன்றாக சம்பாதித்து லாபம் பார்ப்பவர் பி. வாசு. அதேபோல் தற்போது தயாரிப்பாளர் 'கில்லி' சேகரும், டான்ஸ் மாஸ்டர் அம்மா ராஜசேகரும் தனது தம்பியான யுவனை 'சிந்தனை செய்' படத்திற்காக களம் புகுத்தியிருக்கிறார்கள். யுவன் நாயகனாக நடிப்பதுடன் அவரே இயக்கவும் செய்கிறார்.

மேலும் அப்படத்தி‌ன் இசையமைப்பாளர் தமன், இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் சித்தார்த், பரத், நகுல் ஆகியோருடன் இன்னொரு ஹீரோவாக நடித்தவர்.

பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வராததால் இசையமைப்பாளராகிவிட்டார். இசையால் உலக அளவில் பிரபலமாக முடியும். கலங்குங்க தமன்.

Share this Story:

Follow Webdunia tamil