Publish Date: Wed, 07 Jan 2009 (21:04 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
பார்க்கர் பிரதர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக அனிதா ரூபஸ் தயாரிக்கும் படம் 'பைசா'. இப்படத்தின் தொடக்க விழா நேற்று ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.
'பைசா' என்று படத்திற்கு பெயர் வைத்ததனால் தோரணங்களுக்கு பதிலாக 'டூப்ளிகேட்' நோட்டுகளை தோரணங்களாக தொடங்கவிட்டிருந்தது மிகவும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.
நடிகர் பார்த்திபன்தான் இப்படியெல்லாம் யோசிப்பார்... நீங்களும் இப்படி வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்களே என்று பூஜையில் கலந்துகொண்ட சினிமா புள்ளிகள் இப்பட இயக்குனர் ஷாந்தி நிகேதனை பாராட்டியிருக்கின்றனர்.
முதுமுகங்களான சச்சின்-லாவண்யா ஹீரோ-ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு இசை சபேஷ்-முரளி. பாடல்களை பழனிபாரதி எழுதியிருக்கிறார்.
மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் புதுமையான காதலை மையமாகக் கொண்ட படம் இது எனும் இயக்குனரிடம் 'பைசா' தலைப்பு பற்றி கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார். எப்படியோ 'பைசா'வுக்கு போட்ட பைசா வந்தால் சரி.