Entertainment Film Featuresorarticles 0811 11 1081111074_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலத்துக்கேற்ற கதை!

Advertiesment
எல்லாம் அவன் செயல் ஈவ் டீஸிங் ஷாஜி கைலாஷ்
ராமராஜன் - கனகா நடித்த கரகாட்டரக்காரன் படத்தை மறந்தாலும், இதில் வரும் வாழைப்பழ காமெடியை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு காமெடியிலும், கதையிலும், பாடல்களிலும் கலக்கிய படம் அது.

அப்படத்தை தயாரித்த கருமாரி கந்தசாமியும், ஜே. துரையும் மீண்டும் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னால் 'எல்லாம் அவன் செயல்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி பாமா. இவரை சில பணக்கார மாணவிகள் ஈவ் டீஸிங் செய்து அவர் மனதை நோகடிப்பதோடு, பல்வேறு சிக்கல்களுக்கும் ஆளாக்கி வருகிறார்கள். இப்படி மனதை புண்படச் செய்த மாணவிகளை சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதைதான் 'எல்லாம் அவன் செயல்'.

ஈவ் டீஸிங் செய்யும் மாணவிகள் அனைவரும் மும்பை மாடல்கள் என்பதால் கிளுகிளுப்புக்கு பஞ்சமிருக்காது என்கிறார் படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இப்படத்தில் கவர்ச்சியோடு காமெடி, காதல், மோதல் எல்லாம் நிறைந்த கலக்கலான படமாகவும் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

Share this Story:

Follow Webdunia tamil