Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயகி வாய்ப்பை மறுத்த ந‌தியா!

Advertiesment
நாயகி வாய்ப்பை மறுத்த ந‌தியா!
, புதன், 7 ஜனவரி 2009 (21:01 IST)
பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. படம் சூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து அவர் நடித்த சின்னத்தம்பி பெரியதம்பி. பிரபு, சத்யராஜ் நடித்த இப்படத்தில் பிரபுக்கு ஜோடியாக நடித்தார்.

ரஜினி நடித்த ராஜாதிராஜா படத்தில் இரண்டு வேடமேற்ற ஒரு ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். ரகுமானுடன் ஜோடி சேர்ந்து நிலவே மலரே படத்தில் நடித்தவர். இப்படி இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதன்பின் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் பதினைந்து வருட இடைவெளிக்குப் பின் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எ‌ம் குமரன் S/o மகாலட்சுமி, விஷாலின் அத்தையாக தாமிரபரணி போன்ற படங்களில் நடித்தார்.

நல்ல கேரக்டராக இருப்பதோடு கேட்கிற சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் இவரின் இளமையைப் பார்த்து பிரபலமான மலையாள கதாசிரியர் சீனிவாசன் என்பவர் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க கேட்டதோடு, கேட்கின்ற சம்பளம் கொடுப்பதாக சொல்லியும் கண்டிப்பாக மறுத்துவிட்டார் நதியா.

நாற்பது வயதிலும் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் நடிகைகள் மத்தியில் இப்படியும் ஒரு நடிகை.

Share this Story:

Follow Webdunia tamil