Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவிதை நாயகி பாவனா!

Advertiesment
கவிதை நாயகி பாவனா!
, புதன், 7 ஜனவரி 2009 (21:01 IST)
நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டும் என நடிப்பில் பல புதுமைகளை செய்து வருபவர் பாவனா. எந்த கேரக்டர் என்றாலும் அசத்திவிடக் கூடியவர்.

தமிழில் அறிமுகமான 'சித்திரம் பேசுதடி' படத்திலேயே அவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் இன்னும் நடிப்பில் பண்பட்டுக் காணப்பட்டார்.

அவரின் வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகள் பல்வேறு வதந்திகளைப் பரப்பிவிட்டாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்தவருக்கு கொஞ்ச காலமாக மனசு சரியில்லை.

காரணம் அவரின் மேல் சொல்லப்படும் கிசுகிசுக்கள்தான். ஆரம்பத்தில் சித்திரம் பேசுதடி பட இயக்குனர் மிஷ்கின் மீது காதல் என்றார்கள். அதற்குப்பின் தெலுங்கு நடிகர் நிதினுடன் காதல் என்றார்கள்.

இப்படி உடன் நடிக்கும் ஹீரோவோடு காதல் என்று செய்தி பரவுவதால் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்.

படப்பிடிப்பு இடத்தில் மட்டுமில்லாமல் வீட்டிலும் தினம் ஒரு கவிதையாவது எழுதி வைத்துவிட்டுத்தான் தூங்கச் செல்கிறார். இதனால் மனதுக்கு ஆறுதலாக இருப்பதுடன், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தவும் வேண்டியதில்லைதானே.

Share this Story:

Follow Webdunia tamil