Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விஜ‌ய் ரசிகர்களின் திருவிழா!

Advertiesment
‌விஜ‌ய் ரசிகர்களின் திருவிழா!
, புதன், 7 ஜனவரி 2009 (20:56 IST)
விஜயின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்கிற கேள்விக்கான விடை தற்போது முடிவாகியுள்ளது.

இளைய தளபதியின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. விஜயும் நல்ல கலகலப்பான ஆக்சன் படமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

மேலும் பல்வேறு பெரிய நிறுவனங்களும் படத்தை தயாரிக்க முன்வந்தது. தரணி, பேரரசு, ப்ரியதர்ஷன், பிரபுதேவா என்று இயக்கப் போகும் இயக்குனர்களின் பட்டியலும் தயாரானது.

இதில் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் அடங்கும். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது இயக்குனர் சித்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. படத்தை தயாரிப்பது மட்டும் எஸ்.ஏ.சி.

ஒவ்வொரு படத்துக்கும் அமர்க்களப்படுத்தும் விஜய் ரசிகர்கள் அவரின் 50வது படத்தை எப்படி கொண்டாடுவது என்று ஒவ்வொரு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கூடி ஆலோசித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil