Publish Date: Wed, 07 Jan 2009 (20:56 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
தூத்துக்குடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. நடன இயக்குனர் ஹரிகுமார் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருவா பையா' பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதன்பின் சரியாக படங்கள் அமையவில்லை. சின்ன பட்ஜெட் படங்களாக அமைந்தது. நான் கடவுள் படத்தில் கூட நடிப்பதாக இருந்து கடைசியில் மாறிப் போனது. அதனால் நல்ல வாய்ப்புக்கு காத்திருந்தவருக்கு 'ராமன் தேடிய சீதை' நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
இவரின் நடிப்பை பார்த்த இயக்குனர் பி. வாசு பாராட்ட, உச்சிக் குளிர்ந்து போயிருக்கிறார் கார்த்திகா. பாராட்டியதோடு 'நல்ல சந்தர்ப்பம் வரும்போது அழைக்கிறேன்' என்று சொல்ல... தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
பி. வாசு தன் மகன் ஷக்தியை வைத்து இயக்கும் படங்களில் அவருக்கு ஜோடியாகக் கூட நடிக்க வைக்கலாம். சினிமாவில் எதுவும் நடக்கலாம்.