Publish Date: Wed, 07 Jan 2009 (20:55 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
இயக்குனர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், கவிஞர் வைரமுத்து இவர்களின் கூட்டணி என்றால் பாடல்கள் கண்டிப்பாக ஹிட். காதல் மன்னன் முதல் தொடர்ந்து சரணின் எல்லா படங்களுக்கும் இசையமைத்தவர் பரத்வாஜ்.
ஆனால் தற்போது சரண் இயக்கிக் கொண்டிருக்கும் படம் மோதி விளையாடு. வினய் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பவர்கள் ஹரி-லெஸ்லி ஆகிய இரட்டையர்கள்.
இதில் லெஸ்லி புதியவர்தான். ஆனால் ஹரி, தன் கம்பீரமான குரலால் 'என்னைத் தாலாட்ட வருவாளா', 'என் மன வானில் சிறகை விரிக்கும்', 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே', தற்போது சிவாஜி படத்தில் 'பூம்பவாய் ஆம்பல் ஆம்பல்' என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஹரிகரன்தான் இந்த ஹரி. நெடுநாளைய தன் நண்பரான லெஸ்லியுடன் சேர்ந்து 'மோதி விளையாடு' படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு இவர்கள் என்றாலும், பரத்வாஜும் என் படங்களுக்கு இசையமைப்பார். அத்தோடு புதிய இசையமைப்பாளர்களையும் இசையமைக்க அழைப்பேன் என்கிறார் சரண்.