Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கல்லில் இரண்டு 'புலி'

Advertiesment
ஒரு கல்லில் இரண்டு 'புலி'
, புதன், 7 ஜனவரி 2009 (20:54 IST)
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா பல ஆண்டுகளாக மனதில் வைத்துக்கொண்டு நல்ல நேரம் வரும்போது இயக்க வேண்டும் என வைத்திருந்த கதைதான் புலி.

சூப்பர் ஆக்சன் கதையான இதை ஒரு முன்னணி ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று காத்திருந்தார். ஆனால் தனக்கே அப்படி ஒரு கதை தேவை, அப்போதுதான் நடிகனாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என எண்ணி நாயகனாக நடித்து இயக்கவும் உள்ளார்.

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தை முடித்த கையோடு, இதே கதையை பவன் கல்யாண் ஹீரோவாக தெலுங்கில் இயக்கிவிட்டு, அடுத்ததாக தன்னை இயக்கவுள்ளார்.

இந்த புலியில் தன் வழக்கமான இரட்டை அர்த்த வசனமோ, ஆபாச காட்சிகளோ இல்லாமல் முழுக்க முழுக்க, காதல்... மோதல்... அடிதடி அனல் பறக்கப் போகிறதாம்.

ஜனங்களே பாருங்க... சூர்யா திருந்திட்டாரு... சூர்யா திருந்திட்டாரு... எப்படியோ இரண்டு மாநில தியேட்டர்களிலும் புலி சுணங்காமல் பாய்ந்தால் சரி.

Share this Story:

Follow Webdunia tamil