Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கலில் ஸ்ரேயா!

Advertiesment
ஸ்ரேயா வடிவேலு இந்திரலோகத்தில் நா அழகப்பன் புகார் கதிரேசன் நடிகர் சங்கம்
, புதன், 7 ஜனவரி 2009 (20:53 IST)
சந்தோஷமும், துக்கமும் ஒரே நேரத்தில் வரும் என்பது உண்மையோ பொய்யோ, ஆனால் ஸ்ரேயா விஷயத்தில் அப்படித்தான்.

இதற்குமுன் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாரோடு நடித்ததை சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதால் பட வாய்ப்பு இல்லாமல் போக மிகவும் துன்பப்பட்டிருந்தார்.

அதேபோல, தற்போது விக்ரம் நடிக்கும் கந்தசாமி, சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் மட்டுமல்லாமல், ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால் மிகவும் குஷியாக இருந்த வேளையில்... தற்போது இவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பொல்லாதவன் படத் தயாரிப்பாளரும், 5 ஸ்டார் ஆடியோ உரிமையாளருமான கதிரேசன்.

அதனால் விசாரணைக்கு கூப்பிடும்போது வரவேண்டும் என்று நடிகர் சங்கம் கண்டிஷன் போட்டிருப்பதால் ஹாலிவுட் படவாய்ப்பு கைநழுவிப் போய்விடுமோ என்று கலங்கிப் போயிருக்கிறார். ஒரு வேளை த்ரிஷாவின் இடத்தை மர்மயோகியில் பிடித்ததால் வந்த சாபமோ... என்னவோ.

Share this Story:

Follow Webdunia tamil