Publish Date: Wed, 07 Jan 2009 (20:53 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
நான் கடவுள் படத்துக்காக பல படங்களை இழந்தார் நடிகர் ஆர்யா. படத்தில் நடிப்பதோடு சொந்தமாக ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்த பிறகு ஒரு சில இயக்குனர்களை அழைத்து கதைகளைக் கேட்டு ஓ.கே.வும் செய்து வைத்துவிட்டார்.
அப்படி தேர்வு செய்தவர்கள் படம் முடித்த பின் தான் அடுத்து கதை கேட்க முடிவு செய்திருந்த நிலையில், பல புதிய இயக்குனர்கள் வாய்ப்பு கேட்டு அடிக்கடி போன் செய்ய தர்மசங்கடத்துக்கு ஆளானார் ஆர்யா.
அதனால் தற்போது தன் சொல்போன் சிம் கார்டை மாற்றிவிட்டு வேறு எண்ணுக்கு மாறிவிட்டார் ஆர்யா.
அப்படி அவரின் பழைய எண் மீண்டும் ரிங் ஆனால் கதை கேட்க ஆரம்பிக்கிறார் என்று அர்த்தம். அதுவரை பழைய எண்ணுக்கு போன் செய்தால்... நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்றுதான் வரும்.