Publish Date: Wed, 07 Jan 2009 (20:51 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (14:27 IST)
தெனாவட்டு படம் நன்றாக வந்ததோடு சன் டி.வி. வாங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியோடு இருக்கிறார் நடிகர் ஜீவா.
ராம், ஈ போன்ற படங்களில் நல்ல நடிகன் என்ற பெயர் எடுத்ததோடு தெனாவட்டு படம் இன்னொரு தளத்திற்கு தன்னை கொண்டு செல்லும் என்கிறார். அந்த மகிழ்ச்சியை கொண்டாட மனைவியுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.
தெனாவட்டு ரிலீசானதற்கு பிறகு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ள சிவா மனசுல சக்தி படமும் வெளிவர இருக்கிறது. அத்தோடு வித்தை என்ற படத்திலும், குடுமி என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
மேலும் தெனாவட்டு படத்தில் நூற்றுக்கணக்கான அரவாணிகளை நடிக்க வைத்திருப்பது புதுமை என்பதோடு, பாடல்களும் ஹிட்டாக... படத்தின் இயக்குனர் வி.வி. கதிரை பெரிதும் பாராட்டியதோடு சில பரிசுப் பொருட்களையும் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஜீவா.