Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவை சுவாசித்தவர் ஸ்ரீத‌ர்!

Advertiesment
சினிமாவை சுவாசித்தவர் ஸ்ரீத‌ர்!
, புதன், 7 ஜனவரி 2009 (20:51 IST)
மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு நேற்று மாலை சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பிலிம் சேம்பரில் மலரஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீதர் இயக்கிய பல்வேறு படங்களில் நடந்த அனுபவங்களை அவரோடு பணியாற்றிய நிகழ்ச்சிகளை விளக்கினார்கள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

கூட்டம் தொடங்குவதற்கு முன் ஸ்ரீதரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் ஏராளமான திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், கே.ஆர்.ஜி., கே. பாலசந்தர், பாரதிராஜா, காஜா மைதீன், ராதாரவி, வி. சேகர், கோவை தம்பி, வி.சி. குகநாதன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அவர் இன்று நம்மிடம் இல்லாவிட்டாலும் அவர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, உரிமைக்குரல், காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்துள்ளன.

அப்போதே கதைகளில் பல புதுமைகளை செய்ததோடு அல்லாமல் உடல்நல‌ம் சரியில்லாத போதும் படம் இயக்க வேண்டுமென்று இறுதி வரை உறுதியோடு இருந்தவர் ஸ்ரீதர்.

Share this Story:

Follow Webdunia tamil