Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ நினைத்தால் குறைக்கலாம்!

Advertiesment
வாழ நினைத்தால் குறைக்கலாம்!
, புதன், 7 ஜனவரி 2009 (20:50 IST)
சினிமாவில் ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்று அறிக்கை கொடுத்த எத்தனையோ நடிகைகள் இன்று கவர்ச்சி நாயகிகள். அதற்கு உதாரணம் சினேகா, நயன்தாரா, ப்ரியாமணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் சென்னை-28, அஞ்சாதே படங்களில் நடித்த விஜயலட்சுமி. இரண்டு படங்களிலும் நல்ல குடும்பப் பாங்கான கேரக்டர்தான் என்றாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. படங்களும் அதிகமாக இல்லை.

தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கும் சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் அனிமேஷன் படம்தானே என்ற அலட்சியத்தில் இருந்தவர் இப்போது அதிரடியாய் 'நானும் கவர்ச்சி காட்டப் போகிறேன்' என்று கலக்கியிரு‌க்கிறார்.

அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என்றதால், 'அதே நேரம் அதே இடம்' படத்தின் தயாரிப்பாளர் குஷியாக இருப்பதோடு, தேவையான அளவுக்கு இனி அறைகுறை ஆடையாகவே விஜயலட்சுமிக்கு கொடுத்து நடிக்க வையுங்கள் என்று இயக்குனருக்கு கண்ணைக் காட்டியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil