நடிகர் ஜே.கே. ரித்தீஷ் தெரிந்து பல காரியங்களை செய்கிறார் என்றால், யாருக்கும் தெரியாமலும் பல உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது சென்னை நடிகர் சங்கத்தில்... இலங்கை தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைக்கப்பட்ட மேடை அலங்காரம்... சேர், ஒலி பெருக்கி என ஒட்டுமொத்த செலவையும் ரீத்தீஷே ஏற்றுள்ளார். இதன் மொத்த செலவு மூன்று லட்சத்திற்கும் மேல்.
அதேபோல சென்னை சாலிகிராமத்தில் செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாவிரதப் பந்தல் மற்றும் மேடைக்கான மொத்த செலவையும் இவரே ஏற்றுள்ளார்.
இதுபற்றி மீடியாக்காரர்கள் கேட்க, அனைவரின் ஒத்துழைப்போடுதான் செய்தோம் என்றதோடு வெளியேயும் இதுபற்றி மூச்சு விடவில்லையாம்.
இருந்தாக்கூட செய்யனும்னு எவ்வளவு பேருக்கு தோணும். ஆனால் செய்தும் சொல்ல வேண்டாம் என்ற ரித்தீஷை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.