Publish Date: Wed, 07 Jan 2009 (20:47 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (16:58 IST)
இத்தேஷ் ஜெபக் தயாரிப்பில் சேரன் இயக்கி நடிக்கும் படம் பொக்கிஷம். பால்யத்தை நினைவுகூரும் காதல் கதையான இதில் சேரன் ஜோடியாக பத்மப்ரியா நடிக்கிறார்.
பாபா முதல் மோதி விளையாடு வரை பல முக்கிய படங்களுக்கு வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணன் பொக்கிஷத்தில் முதல் முறையாக சேரனுடன் இணைந்து பணியாற்றுகிறார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் யுகபாரதி.
பொக்கிஷத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாகூரில் நடைபெற உள்ளது. மொத்தம் 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாகூரின் புகழ்பெற்ற தர்காவிலும் படப்பிடிப்பு நடத்த சேரன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகூரில் படப்பிடிப்பு முடிந்த பிறகு பாடல் காட்சிகளுக்காக மலேசியா செல்கிறது பொக்கிஷம் யூனிட்.