சென்னையில் இயங்கிவரும் ஒலிப்பதிவு கூடங்களில் மிகவும் நவீனமானது ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிக்கூடம்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காத படங்களின் ஒலிப்பதிவும், இங்கு நடக்கும். தரத்திற்கு முழு கியாரண்டி.
இசைப் புயலைப் போல நவீனமான ஒலிப்பதிவு கூடம் அமைக்க முடிவு செய்துள்ளார், புயலின் மருமகனான ஜி.வி. பிரகாஷ்குமார்.
இவர் அமைக்கயிருக்கும் ஒலிப்பதிவு கூடம், அனைத்து நவீன கருவிகளுடன் ஹைடெக்காக இருக்குமாம். ஒலிப்பதிவு கூடத்துக்கு டிவைன் லேப்ஸ் என்ற பெயரை பிரகாஷ் தேர்வு செய்துள்ளார்.
ஸ்டுடியோ பற்றி சந்தேகம் இருந்தால் மாமாவிடம் கிளியர் செய்து கொள்ளுங்கள்.