அலிபாபா படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய புதுமுகமாக அறிமுகமானவர் கிருஷ்ணா. தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி.
மணிரத்னத்தின் புதிய படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், ப்ரியாமணியுடன் கிருஷ்ணாவும் நடித்து வருகிறார். கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ்.
சோலோ ஹீரோவாக அடுத்து கிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்குனர் பேரரசுவின் உதவியாளர் நந்து இயக்குகிறார். படத்துக்கு தொட்டுப்பார் என்று பெயர் வைத்துள்னர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.