Publish Date: Wed, 07 Jan 2009 (20:46 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (16:51 IST)
நிர்வாண சாமியார்களின் படத்தை போஸ்டரில் வைத்து சிட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சாமிடா யூனிட். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு ஒட்டிய இந்த போஸ்டர்தான் டாக் ஆஃப் தி டவுன்!
முழுக்க காசியில் தயாரான இந்தப் படத்தில், வருடத்திற்க ஒருமுறை நிர்வாண சாமியார்கள் காசியில் குவியும் காட்சி இடம்பெறுகிறது.
"அந்த காலகட்டத்தில் காசி மிக அழகாக இருக்கும். நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு சீகல் பறவைகள் மறைத்திருக்கும். காசியின் உண்மையான அந்த அழகை படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ரெட்டி.
இந்த மாதம் படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. படத்துக்கு சென்சார் யு/ஏ சானிறிதழ் வழங்கியுள்ளது.