Publish Date: Wed, 07 Jan 2009 (20:46 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (15:05 IST)
செல்வராகவன் மீண்டும் தனது பேவரைட் ஏரியாவான, இளமையின் தப்புத் தாளங்களுக்கு திரும்பியிருக்கிறார்.
புதுப்பேட்டைக்குப் பிறகு இவர் இயக்கிவரும் ஆயிரத்தில் ஒருவன், இதுவரை செல்வராகவன் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.
வில்லனாக இதுவரை நடிக்காத வேடத்தில் பார்த்திபன். படத்தின் கதாபாத்திரத்துக்காக நீண்ட தலைமுடி வளர்த்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவனின் போஸ்ட் புரொடக்சன் முடியாத நிலையில், தனது அடுத்த படமான இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தொடங்கியுள்ளார் செல்வராகவன். தனுஷ் ஹீரோ, பருத்தி வீரன் ராம்ஜி கேமரா.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின்போது செல்வராகவனுக்கும், யுவனுக்கும் ஏற்பட்ட விரிசல் இன்னும் சரியாகவில்லை. இது மாலை நேரத்து மயக்கம் படத்துக்கும் ஜி.வி. பிரகாஷே இசையமைக்கிறார்.
செல்வராகவனின் சகோதரி டாக்டர் விமல கீதா படத்தை தயாரிக்கிறார்.