Publish Date: Wed, 07 Jan 2009 (20:45 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (14:59 IST)
கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரிக்கும் படத்தில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.
அடுத்த வருடம் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு முன் அய்யப்பன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஷால்.
அய்யப்பன் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பூபதி பாண்டியன் விஷாலை வைத்து மலைக்கோட்டை படம் இயக்கியபோது, அய்யப்பன் விஷாலிடம் சொன்ன கதையாம் இது.
படத்துக்கு தோரணை என்று பெயர் வைத்துள்ளனர். விஷாலின் தாமிரபரணி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரியன் தோணையின் கேமராமேன். இசை மணிசர்மா. ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படத்தை தயாரிக்கிறார்.
தோரணையில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.