Publish Date: Wed, 07 Jan 2009 (20:44 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (14:35 IST)
சின்னத்திரை இயக்குனர் ப்ரியன். இவருக்கு பெரிய திரை படங்களை இயக்க ஆசை. கதை இருக்கிறது, ஸ்கிரிப்ட் இருக்கிறது. இல்லாதது ஒன்றே ஒன்று... பணம் போட தயாரிப்பாளர்.
இந்த ஒரு காரணத்துக்காக நண்பனின் பெரிய திரை ஆசை தள்ளிப் போவதை பார்த்த ப்ரியனின் நண்பர்கள், நியூ பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கூட்டாகத் தொடங்கி ப்ரியனை பெரியதிரை இயக்குனராக்கியுள்ளனர்.
அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார் ப்ரியன். படத்தின் பெயர், மியாவ்... மியாவ் பூனைக்குட்டி!
நண்பர்கள் சேர்த்து உருவாக்கும் படம் குழந்தைகள் படம் போல இருக்கிறதே!