Publish Date: Wed, 07 Jan 2009 (20:42 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (11:58 IST)
தீபாவளிக்கு வெளியான ஏகன், சேவல் இரண்டும் சரியாகப் போகாததால் நவம்பரில் வெளியாக உள்ள அரை டஜன் படங்களை திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இந்த தீபாவளிக்கு பெரிய படங்கள் இரண்டு மட்டுமே வெளியானது முதல் ஏமாற்றம். வெளியான இரண்டும் பாக்ஸ் ஆஃபிஸில் ஏமாற்றம் அளித்தது மிகப் பெரிய ஏமாற்றம்.
திரையரங்கு கிடைக்காமல் தீபாவளிக்கு வெளியாகாமல் போன அபியும் நானும், வாரணம் ஆயிரம், குரு என் ஆளு, தெனாவட்டு, பூ, வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளது.
வரும் 14ம் தேதி அபியும் நானும், வாரணம் ஆயிரம் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 21 வெளியாவதாக இருந்த பூ ஒரு வாரம் தள்ளி 28ம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் புது முகங்களின் வெண்ணிலா கபடிக் குழு படமும் வெளியாகிறது.
தீபாவளி படங்கள் ஏற்படுத்திய ஏமாற்றத்தை இந்தப் படங்களாவது மாற்றுமா என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பு.