Publish Date: Wed, 07 Jan 2009 (20:41 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (18:00 IST)
ஷக்தி சிதம்பரம் ஒரு முடிவோடுதான் ராஜாதிராஜா படத்தை எடுத்து வருகிறார். படத்தில் மொத்தம் ஆறு ஹீரோயின்கள். தமிழ் திரை வரலாற்றில் இது ரொம்ப புதுசு.
படத்தின் அனைத்துப் பாடல்களையும் இயக்குனர் பேரரசு எழுதியிருக்கிறார். அடுத்தவர்களின் படங்களுக்கு பேரரசு பாடல்கள் எழுதுவது புதிதல்ல என்றாலும் வேறொருவரின் படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதுவது இதுவே முதல்முறை.
படத்தில் ஒரு பாடலை டி. ராஜேந்தர் பாடியிருக்கிறார். இவை போதாது என்று படத்தின் நாயகன் லாரன்சையும் ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார்கள்.
படம் முடிவதற்குள் மேலும் பல ஆச்சரியங்களை தர மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறாராம், ஷக்தி சிதம்பரம்.