இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 9 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் தொலைக்காட்சி நடிகர்கள்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடிகர்கள் நடிகர் சங்கத்தில் நவ. 1ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இன்று திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 9 ஆம் தேதி தொலைக்காட்சி நடிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். இதனை முன்னிட்டு நாளை அனைத்து தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தொலைக்காட்சி நடிகர் சங்கத் தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார்.