Publish Date: Wed, 07 Jan 2009 (20:36 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (14:07 IST)
தீபாவளி ரிலீஸில் எந்தப் படமும் சொல்லும்படி இல்லை. ஹரி படங்களிலேயே மோசமான கலெக்சன் என்ற பெயரையே இதுவரை எடுத்திருக்கிறது சேவல்.
இதனை எப்படியும் மாற்றி அமைக்க வேண்டுமே. அதற்காக ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது சேவல் டீம்.
தற்போது படத்தின் ஹீரோ பரத்தும், ஹீரோயின் பூனம் பஜ்வாவும் மலேசிய ரசிகர்களை குழிப்படுத்த சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்ததும் மதுரை, கோவை ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.
அடுத்து வாரணம் ஆயிரம், அபியும் நானும் படங்கள் வெளியாக உள்ளன. அதனால்தான் அந்த அவசரம்.