Publish Date: Wed, 07 Jan 2009 (20:35 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (12:19 IST)
உண்ணாவிரதம், ரசிகர்கள் சந்திப்பு என பிஸியாக இருந்த ரஜினி இன்று முதல் ஹைதராபாத்தில் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினி இப்படத்தை இயக்குகிறார்.
ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்ததும் குலு மணாலி செல்கிறார் ரஜினி. அங்கு ஷங்கரின் எந்திரன் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
எந்திரனின் முதல்கட்ட படப்பிடிப்பு பெரு நாட்டிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவிலும் நடந்தது. 3ம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொள்கிறார்.