Publish Date: Wed, 07 Jan 2009 (20:35 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (12:18 IST)
கமல் இயக்கி நடிக்கும் சரித்திரப் படமான மர்மயோகிக்கு திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தசாவதாரத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் மர்மயோகி. படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். சரித்திர படமான இதில் நடிக்க த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபுரி, ஷோபனா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் கமல்.
மர்மயோகி படத்தை முதலில் பிரமிட் சாய்மீரா தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பட்ஜெட் அதிகமாக இருப்பதால் அவர்கள் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டுவதாக வந்த தகவல்களை கமல், பிரமிட் சாய் மீரா இரு தரப்புமே மறுத்தது.
இந்நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போக தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என கூறப்படுகிறது.