Publish Date: Wed, 07 Jan 2009 (20:33 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (11:46 IST)
அறிமுக இயக்குனர் வடிவுடையானின் சாமிடா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.
சாமிடா முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம். செம்பி இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டிக்கும் இதுவே முதல் படம்.
இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பிலம்சேம்பர் திரையரங்கில் சாமிடா வின் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது.
அபிராமி ராமநாதன் தலைமை வகிக்க, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் முன்னிலை வகிக்க, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் ட்ரெய்லரை வெளியிடுகிறார். பெற்றுக் கொள்கிறவர் கலைப்புலி எஸ்.தாணு.
விழாவில் மணிரத்னம், ராஜீவ் மேனன், ரவி.கே. சந்திரன் மற்றும் இளம் இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.