Publish Date: Wed, 07 Jan 2009 (20:32 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (17:37 IST)
நடிகர் சிவா முதல்முறை தனி ஹீரோவாக நடிக்கும் படம் 16. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஈசிஆரில் தொடங்கியது.
பேன் முவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சபா படத்தை இயக்குகிறார். விஐபி, புன்னகை பூவே படங்களை இயக்கிய சபா தற்போது அஆஇஈ, மா படங்களை இயக்கி வருகிறார். அத்துடன் 16 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார்.
ஈசிஆரில் சிவா மற்றும் நாயகி மதுஷாலினி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
படத்தை சிவசங்கர் தயாரிக்கிறார்.