Publish Date: Wed, 07 Jan 2009 (20:32 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (17:35 IST)
பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்த ராஜேந்திரன் முதல் முறையாக தயாரிப்பாளராகியிருக்கும் படம் ரா. ரகுநாதன் இளங்கலை பொறியாளர்.
வித்தியாசமான தலைப்பை போலவே வித்தியாசமான கதையை கொண்ட படமாம் இது. படத்தை இயக்குகிறவர் இயக்குனர்கள் கலைமணி, பவித்ரன், முருகதாஸ் ஆகியோரிடம் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்த ஆறுமுகம் இளையபெருமாள்.
பெருமாளுக்கு இது முதல் படம். கத்திக்கப்பல் படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீசாய் படத்துக்கு இசையமைக்கிறார். இன்று பாடல் பதிவுடன் பட வேலைகள் தொடங்கியுள்ளன. அனைத்துப் பாடல்களையும் ந. அண்ணாமலை எழுதுகிறார்.
படத்தில் நடிப்பவர்கள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை.