Publish Date: Wed, 07 Jan 2009 (20:32 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (17:34 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் ஸ்டூடண்ட் மிலன். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் காதல் டு கல்யாணம்.
படத்தின் தலைப்பை வைத்தே இதுவொரு காதல் கதை என்பதை தெரிந்து கொள்ளலாம். படத்தின் விசேசம் இதுவல்ல.
ஷாகீர் என்பவர் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, நடிகர் ஆர்யாவின் தம்பி.
படத்துக்காக ஷாகீர் தனது பெயரை மாற்றலாமா என யோசித்து வருகிறாராம். படத்தின் தலைப்பில் வரும் டு ஆங்கிலம் என்பதால் படத்தின் பெயரும் மாறக்கூடும் என்கிறார்கள்.