Publish Date: Wed, 07 Jan 2009 (20:31 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (14:59 IST)
நியூட்டனின் 3ம் விதி படத்தில் பிஸியாக இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. தனது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி இதில் நடித்திருப்பதால் படத்தை மற்ற அனைவரையும்விட அவர் அதிகம் எதிர்பார்க்கிறார்.
இந்தப் படத்தில் பிஸியாக இருப்பதால் தெலுங்கில் அவர் இயக்குவதாக இருந்த புலி படத்தை கைவிட்டதாக பேச்சு. உண்மையா இது?
சூர்யாவிடம் கேட்டதற்கு நிச்சயமாக இல்லை என்றவர், நியூட்டனின் 3ம் விதி முடிந்ததும் புலி படத்தை இயக்குவதாகவும், ஏற்கனவே படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் கைவிட்டதாக கூறப்பட்ட வில் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஜனவரியில் தொடங்;கும் என்றார்.
ஆக, புலி பதுங்கவில்லை, பாயத்தயாராகிறது.