Publish Date: Wed, 07 Jan 2009 (20:30 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (12:25 IST)
இனி நடிப்பதில்லை என்று சபதம் செய்து இல்லறம் புகுந்த ஜோதிகா இனிப்பான எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனே ஜோதிகாவை சிவகுமார் மருமகளாக ஏற்றுக்கொண்டார் என்று அப்போதே கிசு கிசுக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்விக்கு, அது அவரது விருப்பம் என்று கூறிவந்தார் சூர்யா.
இந்நிலையில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வந்த ஜோதிகா, நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, மொழி படத்தை விட சிறப்பான கேரக்டர் அமைந்தால் அதுபற்றி யோசிக்கலாம் என்று பதிலளித்தார்.
இதுவரை நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவந்தவர், பார்க்கலாம் என பதிலளித்ததால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.