Publish Date: Wed, 07 Jan 2009 (20:29 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (12:22 IST)
திருநங்கைகள் தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என பல துறைகளில் தங்கள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
முதல் முறையாக 9 திருநங்கைகள் ஒரு படத்தில் பாடியுள்ளனர். அந்தப் படம் எம். அருள் முருகன் இயக்கும் அன்றொரு நாள்.
யாமினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.பி.ஆர். படத்தை தயாரிக்கிறார். கேரளாவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து திருச்செங்கோடு, திருநெல்வேலி, தென்காசி முதலிய இடங்களில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் 9 திருநங்கைகளும், 6 வெளிநாட்டு அழகிகளும் ஆடியுள்ளனர். இதில் முக்கியமான விஷயம், இந்தப் பாடலை அந்த 9 திருநங்கைகளே பாடியுள்ளனர்.
திருநங்கைகளின் குரல் சங்கீதத்துக்கு சரிவராது என்பதை இதன் முலம் பொய்ப்பித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்.