Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமீர், சீமானுக்கு பாராட்டு விழா!

Advertiesment
அமீர், சீமானுக்கு பாராட்டு விழா!
, புதன், 7 ஜனவரி 2009 (20:29 IST)
நாளை சென்னை வரும் இயக்குனர்கள் சீமான், அமீருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட சீமானும், அமீரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த விசாரணை வரை தினமும் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்து இடவேண்டும் என நீதிபதி இருவருக்கும் நிபந்தனை விதித்துள்ளார்.

இதன் காரணமாக இருவரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத‌ப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியும் அது முடியாமல் போனது. நாளை பெப்ஸி தொழிலாளர் நடத்தும் உண்ணாவிரத‌ப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் சென்னை வருகின்றனர்.

அவர்களுக்கு நாளை மதியம் இயக்குனர்கள் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. பாராட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என பத்தி‌ரி‌க்கையாளர்களிடம் தெ‌ரிவித்து‌ள்ளா‌ர் பாரதிராஜா.

Share this Story:

Follow Webdunia tamil