Publish Date: Wed, 07 Jan 2009 (20:28 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (11:58 IST)
முன்பெல்லாம் வெளியூர்களில் படம் வெளியாகாவிட்டாலும் சென்னையில் படம் வெளியாகும். தீயவன் அப்படியே உல்டா.
கதிர் இயக்கியிருக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாக வேண்டியது. தயாரிப்பு சிக்கல்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் வெளியூர்களில் 42 இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் படத்தின் இயக்குனர் கதிர்.
சரி, எப்போது படம் சென்னையில் வெளியாகுமாம்?
ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசிவிட்டோம். அனேகமாக அடுத்த வாரம் படம் வெளியாகிவிடும் என்றார் கதிர். படம் வெளியான இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்.