Publish Date: Wed, 07 Jan 2009 (20:27 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (11:52 IST)
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சாலக்குடியில் நடந்து வருகிறது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரியாமணி, ப்ருத்விராஜ், கிருஷ்ணா, வேலு பிரபாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் பிரபு நடிக்கிறார்.
படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரஞ்சிதா. ராணுவ கேப்டனை மணந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்தவர், சின்னத் திரையில் மட்டும் நடித்து வந்தார்.
இந்தியில் படம் இயக்கும் இவரது முயற்சி தோல்வியடைந்ததால், இயக்கத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தவர், மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வரவே உடனே ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
இதில் ரஞ்சிதா பிரபுவுக்கு ஜோடியாம்.