Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் பேட்டி : மக்கள் கருத்து!

Advertiesment
ரஜினியின் பேட்டி : மக்கள் கருத்து!
, புதன், 7 ஜனவரி 2009 (20:26 IST)
ரஜினி நேற்று ரசிகர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தது ரசிகர்களிடையே மட்டுமின்றி, ரசிகர்கள் தவிர்த்த பொது ஜனங்கள் மத்தியிலும் பல்வேறு அபிப்பிராயங்களை தோற்றுவித்துள்ளது.

நேற்றைய சந்திப்பில், தற்போது தனது கவனம் முழுவதும் எந்திரன் படத்தில் உள்ளதாகவும், அப்படம் முடிந்த பிறகே அரசியல் பிரவேசம் குறித்து சிந்திக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் வெற்றிபெற திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு ஆகியவை இருந்தால் போதும் என்று சொல்லப்படுவதை முட்டாள்தனம் என்று கூறிய ரஜினி, அரசியலில் வெற்றியை சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் முடிவு செய்யும் என்று கூறியிருப்பது பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

பொதுமக்கள் ரஜினியின் பேச்சை ஆதரித்தும், மறுத்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமுதா (ஆசிரியர்)

நேத்து நடந்தது ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட பேச்சு வார்த்தை. அதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்கு? நான் கட்சி ஆரம்பிக்கிறேன், இல்லை கட்சி ஆரம்பிக்கலைன்னு அவர் திட்டவட்டமா சொல்லட்டும். அப்புறம் கருத்து சொல்றது பற்றி யோசிக்கலாம்.

பிரின்ஸ் (பழக்கடை வைத்திருப்பவர்)

ரஜினி கடமையை செய் பலனை எதிர்பார்னு எழுதி வச்சு அது முன்னாடி நின்னு பேசியிருக்கார். ரசிகர்கள் அவர்கிட்ட எதிர்பார்க்கிற பலன், அவர் கட்சி ஆரம்பிக்கனும் என்பதுதான். ஆனா, எப்போ ஆரம்பிக்கப் போறேன்னு அவர் வழக்கம் போல எதுவும் சொல்லலை. தாமதமா கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம்னு சொல்வாங்க. அதேமாதிரி தாமதமா கிடைக்கிற பலனும் அநீதியானதுதான். அரசியல் வெற்றி பற்றி அவர் கூறியிருப்பதை கண்டிப்பா யாரும் ஒத்துக்க மாட்டாங்க.

ராஜகோபால் (சாஃப்ட்வேர் இன்ஜினியர்)

பாலசந்தர் உள்பட எல்லா புரொடியூசர்சுக்கும் ரஜினியை வச்சு பணம் பண்ண ஆசை. ஃபேன்சுக்கு அவர் பார்ட்டி ஆரம்பிக்கணும் அதுல பதவி பணம்னு தங்களோட லைஃபை சேப்டி பண்ணிக்கணும். பொலிடிகல் பார்ட்டிக்கு ரஜினியை வச்சு எலக்சன்ல ஓட்டு பர்க்கணும். இத்தனை பேர் டார்ச்சர் பண்றப்போ ஒரு ஆள் என்ன பண்ண முடியும்? அவர் கிளியரா சொல்லியிருக்கார். அவரை தொந்தரவு பண்ணாமல் இருக்கிறதுதான் மனிதாபிமானம்.

விக்கி (ரஜினி ரசிகர்)

தலைவர் கண்டிப்பா அரசியலுக்கு வருவார், முதலமைச்சர் ஆவார். இதை தலைவர் சொன்ன மாதிரி யாராலும் தடுக்க முடியாது. தலைவரை தப்பா பேசுனவங்களுக்கு நேற்று சரியான பதிலடி கொடுத்திருக்கார். அவர் ஆணையிடுற வரைக்கும் நாங்க பொறுமையா காத்திட்டிருப்போம்.

பாஸ்கரன் (டிஸைனர்)

நேற்றைய சந்திப்பின் முலமாக அரசியலுக்கு வருவதற்கான விதையை ரஜினி தூவியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவார்ங்கிறதுக்கான சமிக்ஞை இலங்கை தமிழருக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசிய வார்த்தையிலேயே இருந்தது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் மற்ற கட்சியினரும் அவர் கட்சிக்கு வருவார்கள். ரஜினியிடமிருந்து நல்ல நாகரிகமான அரசியலை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil