Publish Date: Wed, 07 Jan 2009 (20:24 IST)
Updated Date: Mon, 03 Nov 2008 (12:08 IST)
தமிழ் சினிமா சரித்திரத்தில் மதுரையில் இதுவரை எந்த இயக்குனரும் படப்பிடிப்பு அலுவலகம் திறந்ததில்லை. முதல் முறையாக தனது அடுத்தப் படத்துக்கு மதுரையில் அலுலகம் திறந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
பொல்லாதவன் படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்குகிறார் வெற்றிமாறன். படத்தை பொல்லாதவனை தயாரித்த அதே குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிக்கிறார்.
மதுரையை பின்புலமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. அதனால் படப்பிடிப்பு பணிகள் மற்றும் லொகேஷன்களுக்காக மதுரையிலேயே அலுவலகத்தை திறந்துள்ளனர்.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.