குத்துப் பாடலுக்கு ஒத்துப் போகும் குரல் விஜய டி. ராஜேந்தருக்கு. வல்லவன் படத்தில் இவர் பாடிய அம்மாடி ஆத்தாடி ஹிட்டானது சின்ன உதாரணம்.
ஷக்தி சிதம்பரம் படத்தில் தினா இசையில் அனைத்துப் பாடல்களையும் இயக்குனர் பேரரசு எழுதியுள்ளார்.
இதில் ஆண்டிப்பட்டி அரசப்பட்டி என் ஊருடா என்றொரு குத்துப் பாடல் இடம்பெறுகிறது. லாரன்ஸ் பாடுவது போன்ற இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் டி.ஆர்.
வல்லவன் படத்தில் டி.ஆர். பாடிய பாடலையும் பேரரசுவே எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டியும் ஹிட்டாகுமா?