Publish Date: Wed, 07 Jan 2009 (20:23 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (02:02 IST)
பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா தனது பெயரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் வருடாவருடம் இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகர், பாடகிக்கு விருது கொடுக்க உள்ளார்.
இந்த அறக்கட்டளையில் எம்.எஸ். விஸ்வநாதன், வைரமுத்து, பால சரஸ்வதி தேவி, ஜமுனாராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
முதல் வருடம் சிறந்த பாடகிக்கான பி. சுசிலா விருதுக்கு எஸ். ஜானகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா வரும் 13ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.
ஒவ்வெரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் பி. சுசிலா.