Publish Date: Wed, 07 Jan 2009 (20:22 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (02:02 IST)
எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் படம் ரெட்டைச்சுழி. பாலசந்தரின் உதவியாளரான இவர் இயக்கும் முதல் படம் இது.
பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இப்படத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.
பழனிபாரதி, அண்ணாமலை எழுதிய பாடல்கள் ஒலிப்பதிவான நிலையில் இன்று திருநெல்வேலியில் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்தனர். தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம்.
ஆனால் சில நடைமுறை சிக்கல்களின் காரணமாக இன்று படப்பிடிப்பு குழு நெல்லை செல்லவில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என ஷங்கர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.