Publish Date: Wed, 07 Jan 2009 (20:21 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (02:02 IST)
சசியின் பூ வருகிற 21 ம் தேதி வெளியாகிறது. டிஷ்யூம் படத்துக்குப் பிறகு இயக்குனர் சசி, ஸ்ரீகாந்த், மலையாள நடிகை பார்வதி நடிப்பில் இயக்கியிருக்கும் படம் பூ.
கிராமத்து காதல் கதையான இது எழுத்தாளர் தமிழச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ளது. சசி ஒரு சிறுகதையை திரைப்படமாக்கியிருப்பது இதுவே முதல்முறை.
முழுக்க ராஜபாளையம் பகுதியில் தயாரான இப்படத்தை மோசர் பேர் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்கள் சில நாட்கள் முன்பு வெளியாகி ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகிறது. படத்தைப் பார்த்த சத்யம் சினிமாஸ் இப்படத்தின் சென்னை உரிமையை வாங்கியுள்ளது.