ஸ்ரேயா நடித்திருக்கும் முதல் ஹாலிவுட் படம் தி அதர் எண்ட் ஆஃப் தி லைன்.
இந்தியரான அசோக் அமிர்தராஜ; இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரேயா இதன் நாயகி. மும்பையில் கால் சென்டரில் வேலை பார்க்கும் ஸ்ரேயாவுக்கும், அமெரிக்கர் ஒருவருக்கும் ஏற்படும் காதலே இந்தப் படம்.
ஸ்ரேயா முத்தக் காட்சியில் தாராளமாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட், இந்திய கூட்டுத் தயாரிப்பை இப்படம் வலுப்படுத்தும் என்து அனைவரின் எதிர்பார்ப்பு.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் இப்படம் வரும் 31 - ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.