ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் அஜீத்தும், அர்ஜுனும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற வதந்தி பரப்பப்பட்டது.
இதில் உண்மையில்லை என்று சம்பந்தப்பட்ட நடிகர்கள் அஜீத்தும், அர்ஜுனும் பேட்டியளித்தனர். ஈழத் தமிழர் உணர்வுகளை தாங்கள் மிகவும் மதிப்பதாக அவர்கள் நேரடியாக பேட்டியும் அளித்தனர்.
இருந்தும் இந்த வதந்தி ஈழத் தமிழர்களை பெரிதும் காயப்படுத்தியிருக்கிறது. டென்மார்க், சுவிட்சர்லாந்த், ஜெர்மனி ஆகிய இடங்களில் ஏகன் படத்தை திரையிட ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நாடுகளில் ஏகன் படம் திரையிடப்படவில்லை.
தவறான வதந்தியால் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம் ஈழத் தமிழர்களின் உணர்வை அப்பட்டமாக விவரிப்பதை இங்குள்ள அரசியல்வாதிகள் உணர்ந்து கொண்டால் நல்லது.