Publish Date: Thu, 30 Oct 2008 (18:25 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (18:25 IST)
சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டி வருகிறார் அஜித். இதற்கு ரஜினி முக்கிய காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அதுதான் உண்மை. இமயமலை ரிஷிகள் மீதான ரஜினியின் பக்தி உலகறிந்தது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்களை பற்றிய லிவ்விங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ் புத்தகத்தை பரிசளிப்பது அவரது வழக்கம்.
இந்த புத்தகத்தை அஜித்துக்கு தனது பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி. அத்துடன் தனது சென்ற சந்திப்பின் போது அஜித்துக்கு தி ஆர்ட் ஆஃப் ஜாய் ஃபுல் லைஃப் என்ற புத்தகத்தை பரிசளித்துள்ளார்.
அஜித்தின் கட்டுப்பாடற்ற ஆன்மீக நாட்டத்திற்கு ரஜினி பரிசளித்த இந்தப் புத்தகங்களின் பங்களிப்பு கணிசமானவை.