Publish Date: Thu, 30 Oct 2008 (18:21 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (18:21 IST)
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹீரோ யார் என்றால் அது சுப்ரமணியபுரம் ஜெய்.
படத்தின் எண்ணிக்கையில் மட்டுமின்றி எதிர்பார்க்கப்படும் படங்களின் எண்ணிக்கையிலும் அவர்தான் முன்னிலை வகிக்கிறார்.
அதே நேரம் அதே இடம் படத்தில் நடித்து வரும் ஜெய் ஈசிஆரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் நடித்தவரின் இடது காலில் பலத்த காயம்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
சில வார ஓய்விற்குப் பிறகே ஜெய் படப்பிடிப்புக்கு திரும்புவார் என தெரிகிறது.