Publish Date: Thu, 30 Oct 2008 (15:53 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (15:53 IST)
என்னதான் மெகா ப்ளாப் என்றாலும் இப்படியா மனமொடிந்து போவது? சத்யம் படத்துக்குப் பிறகு யாரையுமே இதுவரை சந்திக்கவில்லை விஷால். அடுத்து அவர் நடிக்கும் படம் என்ன என்பதிலும் குழப்பம்.
சத்யத்திற்குப் பிறகு அதேபோன்ற மெகா பட்ஜெட் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதுதான் விஷாலின் திட்டமாக இருந்தது. சத்யம் ப்ளாப்பானதால் அந்த திட்டத்தை ஒதுக்கி வைத்து மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றனர்.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை போக்கிரி படத்தை தயாரித்த ரமேஷ் பாபு தயாரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விஷால் தனது மௌனத்தை களைந்தால் மட்டுமே உண்மை என்ன எனபது தெரியவரும்.